Paristamil Navigation Paristamil advert login

தமிழ்நாட்டின் கஜானா நிரப்பப்படும்: முறைகேடாக சென்ற நிதி பெறப்படும் - எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழ்நாட்டின் கஜானா நிரப்பப்படும்: முறைகேடாக சென்ற நிதி பெறப்படும் - எடப்பாடி பழனிசாமி உறுதி

6 சித்திரை 2026 திங்கள் 15:45 | பார்வைகள் : 1590


கடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரசாரத்தில் பேசியதாவது:-கடலூர் மாவட்டம் வேளாண், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தேன்.ஏழையின் சின்னம், தொழிலாளர்களின் சின்னம், வெற்றி சின்னம், இரட்டை இலை.  மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டர். என்ன பேசுவது என தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளுக்கு கடற்கரையில் இடம் கேட்டபோது கருணாநிதி தரவில்லை. கருணாநிதிக்கு இடம் கொடுக்கவில்லை என விமர்சிக்கிறார். காமரஜருக்கு இடம் கேட்டபோது மறுத்தவர் கருணாநிதி. முதல்-அமைச்சராக பதவியில் இருந்து உயிர்நீத்தால் இடம் என கருணாநிதி கூறினார். அவர் செய்தது அவருக்கு பொருந்தும்.  

கருணாநிதிக்கு இடம் கொடுக்க சட்ட ரீதியாக இயலாத சூழல் இருந்தது. ஸ்டாலின் குற்றஞ்சாட்டுவது நியாயமா? ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். புலம்பி தள்ளுக்கிறார். அவருக்கு தூக்கம் போய்விட்டது.ஸ்டாலினுக்கு மூளையில்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சொல்கிறார். நான் சொல்லவில்லை. ராசாவை கண்டித்தால் இன்னும் பல ஆடியோவை வெளியிடுவார் என்பதால் என்னை விமர்சிக்கிறார்.  

ஸ்டாலின் உதயநிதி சொல்லும் பொய்யை பெரிய புத்தமாக வெளியிடலாம். ஒரு திட்டத்தை அறிவித்தால் கூட தன் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கும் என நினைக்கிறார் ஸ்டாலின் ரூ.8000 கூப்பன் என்பது ஸ்டாலின் போடும் சூழ்ச்சி. இந்ஹ்ட தேர்தலில் திமுக சூழ்ச்சி வீழ்ச்சி பெறும்.  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செல்லா ஓட்டுகள் திமுக சார்பில் தேர்தலில் நிற்கிறார்கள். வீராப்பு பேசுகிறார் ஸ்டாலின். துரோகத்துக்கு இலக்கணம் ஸ்டாலின், கருணாநிதி. மீனவர்களுக்கு துரோகம் செய்தது, கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகவும் கருணாநிதியும்..திமுகவை கடுமையாக எதிர்த்த தேமுதிக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது. விஜயகாந்தை பற்றி கடுமையாக கொச்சையாக பேசிய்வர் வடிவேலு.

அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள்.  2026-ல் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் மாநிலங்களவை பதவி என கூறினேன்.நீங்கள் ஏதேதோ திட்டமிட்டு கூட்டணிக்கு சென்றுள்ளீர்கள். அது உங்கள் சொந்த விஷயம்.நம்மை கடன்காரர்கள் ஆக்கியதுதான் ஸ்டாலினின் சாதனை. பணம் எல்லாம் போகிற இடத்திற்கு போனது. முறைகேடாக சென்ற நிதிகள் அதிமுக ஆட்சியில் பெறப்பட்டு கஜானா நிரப்பப்படும்.  

பழனிசாமி அரசியலில் இருந்து துடைத்தெடுக்கப்படுவார் என மா.சுப்பிரமணியன் சொல்கிறார். பிரியாணி சாப்பிடும் மா.சுப்பிரமணியன் அவர்களே அதிமுக ஆட்சிக்கு வந்தால் களி சாப்பிடுவீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : -

இறப்பு : 17 Aug 2026