கடந்த 24 மணித்தியாலத்தில் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ள 15 கப்பல்கள்
6 சித்திரை 2026 திங்கள் 15:09 | பார்வைகள் : 2381
ஈரான் - அமெரிக்கப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கடந்த 24 மணித்தியாலத்தில் ஈரானின் அனுமதியுடன் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக ஈரான் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்னரான காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போது நடைபெறும் போக்குவரத்து வெறும் 10% மாத்திரமே ஆகும். முன்னதாக ஒரு நாளைக்கு சராசரியாக 138 கப்பல்கள் பயணித்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மிகக் குறைவடைந்துள்ளது.
ஈரான் தனக்கு "நட்பு நாடு" எனக் கருதும் நாடுகளின் கப்பல்களுக்கு மாத்திரம் கடும் சோதனைகளுக்குப் பின்னர் அனுமதி வழங்கி வருகிறது. குறிப்பாக, ஜப்பானைச் சேர்ந்த மூன்றாவது கப்பல் ஒன்று இன்றையதினம் இந்த நீரிணையைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் புரட்சிகர இராணுவத்தின் கடற்படை விடுத்துள்ள அறிக்கையில்,
ஹோர்முஸ் நீரிணை இனி ஒருபோதும் பழைய நிலைக்குத் திரும்பாது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கப்பல்கள் இந்த வழியைப் பயன்படுத்துவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம்.
பாரசீக வளைகுடாவில் ஒரு புதிய பாதுகாப்பு ஒழுங்கை நிலைநாட்ட ஈரான் தயாராகி வருகிறது. இதன்கீழ், நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு ஈரானிய ரியாலில் வரி வசூலிக்கும் புதிய சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் விதித்த 48 மணித்தியால கால அவகாசம் நிறைவடையவுள்ள நிலையில், போரைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து ஒரு தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கான (45 நாட்கள்) திட்டத்தை முன்வைத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதுடன், நிலையான மற்றும் நிரந்தரமான தீர்வையே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire