திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
7 சித்திரை 2026 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 1607
திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு, சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக என்றாலே வாரிசு அரசியல். திமுகவில் தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குடும்ப ஆட்சியாகவும், ஊழல் நிறைந்த ஆட்சியாகவும் இருந்தது திமுக ஆட்சி.
தமிழகத்தில் திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; இபிஎஸ் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இது மாற்றத்திற்கும் நல்லாட்சிக்குமான நேரம். மயிலாப்பூர் மக்கள் ஜெயலலிதாவின் நல்லாட்சியை விரும்புகிறார்கள்; மயிலாப்பூர் மக்கள் தமிழிசைக்கு வாக்களிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire