Paristamil Navigation Paristamil advert login

விரைவில் ராஜாவின் அடுத்த ஆடியோ ரிலீஸ்: பழனிசாமி

விரைவில் ராஜாவின் அடுத்த ஆடியோ ரிலீஸ்: பழனிசாமி

7 சித்திரை 2026 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 1609


ஸ்டாலினால் ராஜாவை ஒண்ணும் பண்ண முடியாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறார். அடுத்த ஆடியோ எப்போ வரப்போகுதோ தெரியவில்லை'  என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

பெரம்பலுாரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:

மோடியைப் பற்றி ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். ஆனால், அவரது தந்தை கருணாநிதி, 'மோடி மிகவும் நல்லவர்' என பேசி இருக்கிறார். தன் தந்தை வழியில் நடப்பதாகக் கூறும் ஸ்டாலின், அவர் சொன்னபடி மோடி நல்லவர் என்ற வழியில் அல்லவா நடக்க வேண்டும்?

காங்கிரஸ் கூட்டணியை, 'கூடா நட்பு கேடாய் முடியும்' என கருணாநிதி சொன்னார். கடந்த 2014ல் ஸ்டாலினே, 'யாருடன் கூட்டணி என்பதை விட, யாருடன் கூட்டணி இல்லை என்பதே முக்கியம். இனி ஒருபோதும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை' என்றார். அப்படியிருக்கும்போது இப்போது எதற்கு காங் கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்? ஸ்டாலின் அவர்களே, நீங்கள் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஒரு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது.

தி.மு.க., - எம்.பி., ராஜா பேசிய ஆடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிறார். தன்னை கண்டித்தால், இன்னும் பல ஆடியோ இருக்கிறது என மிரட்டி இருக்கிறார். அதனால், ஸ்டாலினால் அவரை ஒண்ணும் பண்ண முடியாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறார். அடுத்த ஆடியோ எப்போ வரப்போகுதோ தெரியவில்லை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : -

இறப்பு : 17 Aug 2026