தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் அதிமுகவின் லீமா ரோஸ்
7 சித்திரை 2026 செவ்வாய் 14:24 | பார்வைகள் : 1695
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் லீமாரோஸ் மார்ட் டின் போட்டியிடுகிறார்.
வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று அவர் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் மனுதாக்கல் செய்தார்.பின்னர் அவர் லால்குடி ரவுண்டானாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசும்போது, லால்குடி தொகுதியை கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுய தொழில், மற்றும் அரசு திட்டங்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அளித்து தொகுதியை முன் மாதிரியாக உருவாக்க பாடுபடுவேன் என்றார். தொடர்ந்து அவர் திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரிப் பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் லீமா ரோஸ், தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.1,048 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் பெயரில் ரூ.4,159 கோடி மதிப்பிலான சொத்துகளும், மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் பெயரில் ரூ.665 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் என்ற பெயரை லீமா ரோஸ் பெற்றுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire