Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மக்கள் ரயிலில் செல்ல வேண்டாம் - இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரான் மக்கள் ரயிலில் செல்ல வேண்டாம் - இஸ்ரேல் எச்சரிக்கை

7 சித்திரை 2026 செவ்வாய் 10:47 | பார்வைகள் : 1890


ஈரான் மக்களை 07.04.2026 ரயிலில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான்  மக்களின் பாதுகாப்புக்காக ஈரான் நேரப்படி இரவு 9 மணி வரையில் ரயில் பயணங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என இராணுவத்தின் பாரசீக சமூக ஊடகக் கணக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்களிலும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகிலும் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (07) இரவு 8 மணிக்குள் ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற போக்குவரத்தை அனுமதிக்க ஈரான் அரசு மறுத்ததால் ஈரான் முழுவதும் உள்ள பொதுமக்கள் உட்கட்டமைப்பு இலக்குகளைத் தாக்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியள்ள நிலையில் இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.