புதிய சாதனை படைத்த ஆர்ட்டெமிஸ் II விண்கலம்
7 சித்திரை 2026 செவ்வாய் 15:07 | பார்வைகள் : 2101
ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தில் பயணித்த வீரர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உரையாற்றி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
பூமியில் இருந்து நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டுள்ள விண்கலம் என்ற புதிய சாதனையை ஆர்ட்டெமிஸ் II (Artemis II) படைத்துள்ளது.
இந்த விண்கலத்தில் மூன்று அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனேடிய விண்வெளி வீரர் என நான்கு பேர் தங்களது விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அப்பல்லோ 13 விண்கலத்தின் சாதனையை ஆர்ட்டெமிஸ் II விண்கலம் முறியடித்து இருப்பதன் மூலம் இந்த விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள நால்வர் குழு வரலாற்று பெருமையை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துரையாடினார், மேலும் தனது பாராட்டுகளையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அப்போது, பல வருடங்களாக முறியடிக்க முடியாத சாதனையை முறியடித்து இருப்பதன் மூலம் வரலாற்றில் இடம் பெற்று இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளி வீரர்களின் துணிச்சலை பாராட்டிய டிரம்ப், ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பிய பிறகு, அவர்களின் வெற்றியை கொண்டாட வெள்ளை மாளிகைக்கும் வருமாறு ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire