நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலகுகிறாரா?
7 சித்திரை 2026 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 1968
தென்னிந்திய திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 2000ம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆகி இன்றுவரை நாயகியாக தன்னை தக்கவைத்திருப்பவர் இவர். இந்த நிலையில், திரிஷா திரையுலகை விட்டு விலகப் போவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக திரைத்துறையில் நடக்கும் பல விஷயங்கள் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனல் மற்றும் பேட்டிகள் வாயிலாக பல தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். அவர் தற்போது திரிஷாவின் திரைப்பயணம் குறித்துக் கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்துப் பேசியுள்ள சித்ரா லட்சுமணன், நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலகவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மைதான். சமீபத்தில் சில தயாரிப்பாளர்கள் என்னிடம் அதை உறுதி செய்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த தயாரிப்பாளர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire