சீட் கிடைக்காதவர்களுக்கு பொறுப்பு வழங்கிய பா.ஜ.,
8 சித்திரை 2026 புதன் 08:45 | பார்வைகள் : 1580
பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை, அக்கட்சி நியமித்துள்ளது. இதில், போட்டியிட 'சீட்' கிடைக்காமல், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ., 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், ராமலிங்கம், வெங்கடேசன், மாநில பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்ளிட்டோர், தேர்தலில் போட்டியிட 'சீட்' எதிர்பார்த்தனர். ஆனால், வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவர்கள் கடும் அதிருப்தி யில் உள்ள நிலையில், 27 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களுக்கு உதவியாகவும், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுடன் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், பொறுப்பாளர்களை, பா.ஜ., நியமித்துள்ளது. அதில், அதிருப்தியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தளி தொகுதி பொறுப்பாளராக ராமலிங்கம்; மொடக்குறிச்சி - கனகசபாபதி; திருவண்ணாமலை - டால்பின் ஸ்ரீதர்; வாசுதேவநல்லுார் - பால் கனகராஜ்; ஆவடி - வெங்கடேசன், பாஸ்கர்; அறந்தாங்கி - கார்த்தியாயினி; மயிலாப்பூர் - பிரமிளா சம்பத், சதீஷ்குமார்; ராசிபுரம் - கே.வெங்கடேசன்;
மதுரை தெற்கு - ராகவன்; கந்தர்வகோட்டை - நாச்சியப்பன்; தஞ்சை - நாகராஜ்; திருப்பூர் தெற்கு - அர்ஜுனமூர்த்தி; சாத்துார் - ராதாகிருஷ்ணன், நீலமுரளி யாதவ்; திருச்செந்துார் - உமாரதி என, 27 தொகுதிகளுக்கு பா.ஜ., சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire