இலங்கையில் கடும் வறட்சி - கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகக் கட்டுப்பாடு
8 சித்திரை 2026 புதன் 17:54 | பார்வைகள் : 1881
தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக, லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, அந்த சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு பின்வரும் கால அட்டவணையின்படி நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் (தடைப்படும்) என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று இரவு முதல் நீர்த்தடை
இன்று (ஏப்ரல் 08, புதன்கிழமை) இரவு 8.00 மணி முதல் நாளை (ஏப்ரல் 09, வியாழக்கிழமை) காலை 8.00 மணி வரை.
ஹோமாகம: ஹைலெவல் வீதி, பிட்டிபன சந்தியிலிருந்து கலகெதர, மாவத்தகம மற்றும் பாதுக்க வீதி.
கொடகம: லியன்வல பாலம் வரையான பகுதி மற்றும் அதுருகிரிய வீதி கொடகம முதல் ஹபரகட வரை.
தாம்பே ஹோரகல வீதி, மாதுலாவ ஹோரகல வீதி, சோமரத்ன மாவத்தை, ஆடிகல வீதி, அளுத்கம வீதி.
ரணால ஹபரகட வீதி, மோரகஹஹேன வீதி மற்றும் புவக்பிட்டிய வீதி.
நாளை பகல் நேர நீர்த்தடை
நாளை (ஏப்ரல் 09, வியாழக்கிழமை) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
மத்தேகொட, பிராமணகம, கிரிங்கமபுமுணுவ, தீப்பங்கொட மற்றும் பொல்கஸ் ஓவிட்ட வீதி.
கொடமாவ முதல் 342 பேருந்து வீதி எல்லை வரை மற்றும் புபுது மாவத்தை முதல் 342 பேருந்து வீதி எல்லை வரை.
இதனால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire