சந்தாதாரர்களுக்கு மே மாதத்தில் எரிவாயுவின் விலை 15.4% உயர்வு!!
8 சித்திரை 2026 புதன் 22:07 | பார்வைகள் : 3660
மே மாதம் முதல் எரிவாயு விலை 15.4% அதிகரிக்கப்பட உள்ளது. இது சுமார் 73% வீட்டு சந்தாதாரர்களை பாதிக்கும். எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவலின்படி, இந்த உயர்வால் சிலர் மாதாந்திர கட்டணத்தில் சராசரியாக 6.19 யூரோ வரை கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும்.
இந்த விலை உயர்வு மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போரின் விளைவாக ஏற்பட்ட எரிசக்தி சந்தை மாற்றங்களால் உருவானது. சந்தை விலைகள் அதிகரித்ததால், எரிவாயு வழங்கல் செலவுகளும் உயர்ந்துள்ளன.
ஆனால் இந்த உயர்வு வசந்தகாலத்தில் அமுலுக்கு வருவதால், வெப்பமூட்டல் தேவைகள் குறைவாக இருக்கும். இதனால் குடும்பங்களின் மொத்த செலவில் ஏற்படும் தாக்கம் ஒரு அளவுக்கு குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நிலையான விலை ஒப்பந்தம் கொண்டுள்ள சுமார் 27% சந்தாதாரர்கள் இந்த உயர்வால் உடனடியாக பாதிக்கப்படமாட்டார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire