Paristamil Navigation Paristamil advert login

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கியூபாவுக்கான தனது சேவையை நிறுத்தும் ஏர் பிரான்ஸ்!!

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கியூபாவுக்கான தனது சேவையை நிறுத்தும் ஏர் பிரான்ஸ்!!

4 பங்குனி 2026 புதன் 16:58 | பார்வைகள் : 3121


எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, ஏர் பிரான்ஸ் (Air France) நிறுவனம் மார்ச் 29 முதல் பரிஸ்–ஹவானா (Paris-Charles de Gaulle - La Havane) விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கியூபாவின் விமான நிலையங்களில் கெரோசின் குறைபாடு குறைந்தது ஏப்ரல் வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நிலைமை மேம்பட்டால், ஜூன் 15 முதல் சேவை மீண்டும் தொடங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. வாஷிங்டன் விதித்துள்ள எரிசக்தி தடையும், வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதும்தான் இந்த பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இதனால் பல சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. 

இந்த நிலைமை, கியூபாவின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றான சுற்றுலா துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.