Paristamil Navigation Paristamil advert login

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் தம்பிதுரை!

5 பங்குனி 2026 வியாழன் 09:32 | பார்வைகள் : 1921


அதிமுக ராஜ்யசபா  வேட்பாளர் ஆக  தம்பிதுரை மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள  6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் 16ம் தேர்தல் நடைபெற  உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது. எம்எல்ஏக்கள்  பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.   திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஞ்சிய இரண்டு இடங்கள் தேமுதிகவுக்கும், காங்கிரசுக்கும்  திமுக வழங்கிவிட்டது.

இந்நிலையில், அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில்  தம்பிதுரை மீண்டும் களமிறங்குவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2020 ல் ராஜ்யசபாவுக்கு தேர்வான அவர், 1984, 1989, 1998, 2009, 2014 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனார். மத்திய இணை அமைச்சராகவும், லோக்சபா துணை சபாநாயகர் ஆகவும் பதவி வகித்துள்ளார்.

அதிமுகவுக்கு கிடைக்கும் 2வதுஇடத்தை பாமகவுக்கு வழங்குவதாக இபிஎஸ் கூறியுள்ளார்.  அக்கட்சி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2