பாபர் அஸாம் இல்லாமல் பாகிஸ்தான் அணி அறிவிப்பு- முக்கிய வீரர்களுக்கு இடம்
5 பங்குனி 2026 வியாழன் 06:39 | பார்வைகள் : 1930
வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாம் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மார்ச் 11ஆம் திகதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன. இதற்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இந்த அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி கேப்டனாக செயல்பட உள்ளார்.
நடப்பு டி20 உலகக்கிண்ணத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அஸாம் (Babar Azam) ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
அதே சமயம், விக்கெட் கீப்பர் மொஹம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan), வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் (Haris Rauf) ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
அணி விபரம்: ஷாஹீன் ஷா அப்ரிடி (அணித்தலைவர்), அப்துல் சமாத், அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ராஃப், ஃபைஸல் அக்ரம், ஹாரிஸ் ராஃப், ஹுசைன் தலத், மாஸ் சதாகத், மொஹம்மது ரிஸ்வான், மொஹம்மது வசிம், காஸி கோரி, சாத் மசூத், சாஹிப்ஸதா ஃபர்ஹான், சல்மான் அஹா மற்றும் ஷாமில் ஹுசைன்
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire