வாத்தின் வயிற்றுக்குள் தங்கம்...
6 பங்குனி 2026 வெள்ளி 14:43 | பார்வைகள் : 1790
தங்க முட்டையிடும் வாத்து குறித்த கதையை நம்மில் பலர் சிறுவயதில் கேட்டிருப்போம். இந்நிலையில், உண்மையாகவே, சீனர் ஒருவருக்கு வாத்து ஒன்றின் வயிற்றுக்குள்ளிருந்து 10 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.
சீனாவின் Hunan மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றில் வாழ்ந்துவருபவர், Liu.
சென்ற மாதம் இறைச்சிக்காக வாத்து ஒன்றை வெட்டிய Liu, வாத்தின் வயிற்றுக்குள் ஏதோ வித்தியாசமான துணிக்கைகள் இருப்பதை கவனித்துள்ளார்.
ஆய்வில் அவை தங்கத் துகள்கள் என தெரியவந்துள்ளது. அந்த வாத்தின் வயிற்றுக்குள் சுமார் 10 கிராம் தங்கம் இருந்ததாகவும், அதன் மதிப்பு 12,000 yuan என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
12,000 yuan என்பது இலங்கை மதிப்பில் 5,40,754.32 ரூபாய் ஆகும்.
வாத்தின் வயிற்றில் தங்கம் கிடைத்தது, தன் மகனுக்கு அடுத்த ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக மையும் என்பதற்கான அடையாளம் என கருதுகிறார் Liuவின் தந்தை.
Liuவின் குடும்பம் வாத்துக்கள் வளர்த்துவருகிறது. இந்த வாத்துக்கள் அருகிலுள்ள Chenshui நதிப்படுகையில் உணவு தேடுவதுண்டாம்.
அப்படி உணவு உட்கொள்ளும்போது,அந்த நதிப்படுகையிலிருந்த தங்கத் துகள்களை அவை உட்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
1970, 80களிலிருந்தே, அந்த நதியின் மணலில் தங்கம் இருக்கும் என்பதால் ஏராளமான மக்கள் அங்கு குவிவதுண்டாம். பின்னர், அதிகாரிகள் அங்கு மக்கள் தங்கம் எடுக்கத் தடைவிதித்துவிட்டார்களாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire