Paristamil Navigation Paristamil advert login

7 லட்சம் வீடு கட்டித்தருவோம்; 14 அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

7 லட்சம் வீடு கட்டித்தருவோம்; 14 அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

7 பங்குனி 2026 சனி 04:53 | பார்வைகள் : 1901


2030ம் ஆண்டுக்குள் 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றிய அவரது அறிவிப்புகள் பின்வருமாறு:

1.  2030ம் ஆண்டுக்குள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித்தப்படும்.

2. மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.

3. மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உணவுப்பொருள் உற்பத்தி உயர்த்தப்படும்.

4. அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 300க்கும் மேற்பட்ட நூலகங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு, வாழ்க்கை திறன் கல்வியை உறுதிப்படுத்துவோம்.

5. நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். உலக அளவில் தமிழக இளைஞர்கள் போட்டி போடும் அளவுக்கு கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

6. ஜவுளி, ஆடை, தோல் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

7. சிறுபான்மை சமூகத்தினர் தொழில் தொடங்க கடன் வசதிகள் எளிமைப்படுத்தப்படும். தேவைப்படும் இடங்களில் சமூகநீதி விடுதிகள் அமைக்கப்படும். வீட்டுமனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பங்களுக்கும் 2030க்குள் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். உண்டு உறைவிட பள்ளிகள் விரிவாக்கம் செய்யப்படும்.

8. கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவோம். நகர்புறங்களுக்கு இணையான வசதிகளுடன் கிராமப்புற வளர்த்தெடுக்கப்படும். முதல்கட்டமாக 10 ஊராட்சிகளில் உத்தமர் காந்தி மாதிரி கிராம திட்டம் செயல்படுத்தப்படும்.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2