மன்னாரில் பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது
6 பங்குனி 2026 வெள்ளி 17:39 | பார்வைகள் : 1937
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (04) இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண் உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் படி, வீட்டிலிருந்து தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளிட்ட சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.என். கெட்டியாராச்சி அவர்களின் பணிப்புரையின் பேரில், மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பத்தே விதான தலைமையிலான பொலிஸ் குழு விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதன் போது பிரதான சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மற்றும் மீட்கப்பட்ட நகைகள், பணம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire