ஒரு மில்லியன் யூரோக்களை வென்ற ஐந்து குழந்தைப் பருவ நண்பர்கள்!!
6 பங்குனி 2026 வெள்ளி 21:06 | பார்வைகள் : 5095
Finistère பகுதியில் வசிக்கும் ஐந்து குழந்தைப் பருவ நண்பர்கள், பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை வாங்கிய EuroMillions லாட்டரி டிக்கெட் மூலம் MyMillion பரிசாக 1 மில்லியன் யூரோக்களை வென்றுள்ளனர்.
அந்த நாளில், அவர்கள் பினிஸ்தேர் பகுதியில் உள்ள லோப்பெரே (Loperhet) நகரில் இருக்கும் Ar Glanvez என்ற பார்-டபாக் உணவகத்தில் சந்தித்து மகிழ்ச்சியாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர். விளையாட்டு பதிவு முடிவடையும் நேரத்திற்கு முன்பாக, அவர்கள் ஒன்றாக சேர்ந்து அதிர்ஷ்டத்தை முயற்சிக்க முடிவு செய்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கினர். சரியான எண்கள் இல்லை… ஆனால் பெரிய பரிசு காத்திருந்தது.
சில நாட்கள் கழித்து, நண்பர்களில் ஒருவருக்கு லாட்டரி முடிவுகளை சரிபார்க்கும் எண்ணம் வந்தது. வெளியான எண்களில் எதுவும் அவர்களுடைய டிக்கெட்டுடன் பொருந்தவில்லை. ஆனால் ஒரு விதிவிலக்கு இருந்தது அதுதான் MyMillion எண்ணாகும்.
MyMillion என்பது பங்கேற்பாளர்களுக்கு சீரற்ற முறையில் வழங்கப்படும் ஒரு தனிப்பட்ட எண். அது பொருந்தினால், நேரடியாக ஒரு மில்லியன் யூரோக்கள்பரிசு கிடைக்கும். அதை கண்டதும் அவர் உடனே டிக்கெட் புகைப்படத்தையும் லாட்டரி முடிவின் ஸ்கிரீன்ஷாட்டையும் மற்ற நண்பர்களுக்கு அனுப்பினார்.
மிகுந்த உணர்ச்சி மற்றும் மகிழ்ச்சியுடன், அவர்கள் மார்ச் 2 திங்கட்கிழமை, பிரெஸ்ட் (Brest) அருகே உள்ள புளுகாஸ்டெல்-டாவுலாஸ் (Plougastel-Daoulas) பகுதியில் உள்ள Française des Jeux பணம் வழங்கும் மையத்துக்கு சென்று பரிசை பெற்றனர்.
அதே நேரத்தில், இந்த பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற எதிர்கால திட்டங்களையும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் முறை அல்ல.
இதேபோல் பகிர்ந்து வென்ற பல சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளன. 2025 ஆகஸ்ட் மாதத்தில், பரிஸில் உள்ள 16வது வட்டாரத்தில் இருக்கும் ஒரு பார்-டபாக் இல் ஐந்து நண்பர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு 250 மில்லியன் யூரோக்கள் பரிசு கிடைத்தது.
மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் பெல்ஜியத்தில் 21 நண்பர்கள் சேர்ந்து வாங்கிய EuroMillions டிக்கெட்டுக்கு 123 மில்லியன் யூரோ பரிசு கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரும் சுமார் 5.8 மில்லியன் யூரோக்கள் வீதம் பெற்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire