இலங்கையில் சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் அடித்துக் கொலை - சந்தேகநபர் கைது
7 பங்குனி 2026 சனி 13:49 | பார்வைகள் : 1883
மின்னேரியா - ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரொட்டவெவ, கல்ஓய சந்தி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த முதியவரின் சகோதரியை, அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி வந்துள்ளார். இது குறித்து அறிந்த முதியவர், தனது சகோதரியைக் காப்பாற்றுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது, கோபமடைந்த சகோதரியின் மகன், தடியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான சந்தேகநபரின் தாய் படுகாயமடைந்த நிலையில் ஹிங்குராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire