ஜனநாயகன் விரைவில் ரிலீஸ்?...
7 பங்குனி 2026 சனி 15:48 | பார்வைகள் : 1991
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்து உருவான திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர்.. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியிடவில்லை
எனவே படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்துக்கு போனார்.. ஆனால் ஒரு மாதமாகியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வழக்கை வாபஸ் பெற்றதோடு படத்தின் மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்தார் விஜய்.
ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் ‘நாங்கள் வருகிற 9ம் தேதி படம் பார்க்க திட்டமிட்டிருக்கிறோம். ஏற்பாடு செய்யுங்கள்’ என தணிக்கை வாரியத்திலிருந்து தயாரிப்பாளருக்கு தகவல் போயிருக்கிறது. அவர்கள் படம் பார்த்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சான்றிதழ் கொடுத்து விடுவார்கள்..
ஆனாலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுதான் படம் வெளியாகும் என தெரிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire