அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செல்லாக்காசுகள்: இபிஎஸ் பேச்சு
9 பங்குனி 2026 திங்கள் 05:48 | பார்வைகள் : 1937
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செல்லாக்காசுகள். அவர்கள் திமுகவிடம் சரண் அடைகின்றனர் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது:
அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா விரட்டி அடித்துள்ளது. எந்த கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அதிமுகவை பாஜ விழுங்கிவிடும், அழித்துவிடும் என ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
கருணாநிதியே நம்பாத, பதவி கொடுக்காத ஒரு நபர் ஸ்டாலின். உதயநிதி திமுகவுக்கு என்ன செய்தார். திமுகவில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் பேசினார். நன்றியை மறந்து திமுகவில் புகுந்துள்ளார் ஓபிஎஸ்.
கஞ்சா விற்பனை செய்வதே திமுகவினர் தான். அதனால் தான் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கள் கட்சியை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம். உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.
ஆமை புகுந்த வீடு போல், ஓபிஎஸ் எங்கு சென்றாலும் அந்த கட்சிக்கு அதேகதி தான். முடிந்துவிடும். சுயநலவாதிகள் எந்த கட்சியில் இடம்பெற்றாலும் அக்கட்சி அழிந்துவிடும். டெபுபேசனில் சென்றுள்ளனர். அதிமுகவில் பயிற்சி பெற்று திமுகவில் வேலை செய்கின்றனர். அதிமுகவில் பதவி சுகம் பெற்றவர்கள் திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் செல்லாக்காசுகள். உங்களிடம் சரண் அடைகின்றனர். யார் யார் எல்லாம் துரோகம் இழைத்தார்களோ, நீக்கினாலோ அவர்களை ஸ்டாலின் சேர்க்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire