Paristamil Navigation Paristamil advert login

புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை...: விஜயை விமர்சிக்கிறார் திருமாவளவன்

புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை...: விஜயை விமர்சிக்கிறார் திருமாவளவன்

9 பங்குனி 2026 திங்கள் 06:52 | பார்வைகள் : 1656


தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், புலியை பார்த்து பூனை கோடு போட்ட கதை போன்று உள்ளது, என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தவெக சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் நடந்த மகளிர் தின விழாவில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், அனைத்து குடும்ப தலைவியருக்கும் மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும்; அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு கட்டணமின்றி பயணம்; தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்,” என அறிவித்து இருந்தார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

புலியை பார்த்து பூனை கோடு போட்டு கொண்ட கதை என்று சொல்வார்களே அப்படித்தான் என்று நான் கருதுகிறேன். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.

பல புதிய அறிவிப்புகளையும் மகளிர் நலன் கருதி அறிவித்துள்ளது. இதனை எதிர்கொள்வதற்கு இத்தகைய வாக்குறுதிகளை வழங்க வேண்டிய  கட்டாயம்  நேர்ந்துள்ளது.  அது எந்த வகையிலும் திமுக கூட்டணியின் செல்வாக்கை பாதிக்காது. திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2