Paristamil Navigation Paristamil advert login

மூவரை பலி எடுத்த - கோர வீதி விபத்து!!

மூவரை பலி எடுத்த - கோர வீதி விபத்து!!

8 பங்குனி 2026 ஞாயிறு 16:39 | பார்வைகள் : 3252


இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Seine-et-Marne மாவட்டத்தின் Meaux மற்றும் Château-Thierry நகரங்களுக்கிடையே இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றது. நால்வர் கொண்ட குழு ஒன்று கார் ஒன்றில் பயணித்த நிலையில், கார் திடீரென வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த 19 வயதுடைய சாரதி, 31 மற்றும் 20 வயதுடைய இருவர் என மூவர் கொல்லப்பட்டனர். நான்காவது நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி  Nitrous oxide உட்கொண்டிருந்ததாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் வேறு எந்த வாகனங்களும் உள்ளாகவில்லை.