11 மாதங்களுக்குப் பின் மீண்டும் செயல்படும் GARE D'ISSY தொடருந்து நிலையம் ..
8 பங்குனி 2026 ஞாயிறு 19:47 | பார்வைகள் : 3834
GARE D'ISSY RER C தொடருந்து நிலையம் சுமார் 11 மாதங்களாக பகுதி அல்லது முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், இந்த திங்கட்கிழமை 09 ம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதன் மூலம் RER C ரயில்கள் இரு திசைகளிலும் நிலையத்தில் மீண்டும் நிறுத்தம் மேற்கொள்ளும். ISSY தொருந்து நிலையத்தில் பயணிகள் கட்டிடம் மற்றும் Grand Paris Express திட்டத்தின் 15வது தெற்கு மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும் அடித்தள இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் கடந்த ஆண்டு முதல் சேவையில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.
கட்டுமானப் பணிகள் காரணமாக 2025 ஏப்ரல் மாதத்தில் தளங்களுக்கு இடையிலான அடித்தள நடைபாதை மூடப்பட்டது. இதனால் சில பயணிகள் தொடருந்து பாதைகளை குறுக்காக கடக்க முயன்றதால் பாதுகாப்பு காரணங்களுக்காக SNCF ஒரு தளத்தை மூடி, ஒரே திசையில் மட்டும் தொடருந்து சேவையை இயக்கியது.
பின்னர் இந்த ஏற்பாடு நீட்டிக்கப்பட்டு 2026 ஜனவரியில் நிலையம் முழுமையாக இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டது. இதனால் தினமும் சுமார் 8000 பயணிகள் பயன்படுத்தும் இந்த நிலையத்தை சார்ந்தவர்கள் கடும் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டனர்.
இப்போது நிலையம் மீண்டும் திறக்கப்பட்டாலும் கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. தளங்களுக்கு இடையிலான அடித்தள சுரங்கப்பாதையும் இன்னும் திறக்கப்படாததால் பயணிகள் வெளிப்புற சாலையை சுற்றிச் சென்று தளங்களை மாற்ற வேண்டியுள்ளது.
புதிய நடைபாதை அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், சிலர் தொடருந்து பாதைகளை குறுக்காக கடக்கக் கூடும் என்ற அச்சம் உள்ளது. அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் மீண்டும் நிலையத்தில் பகுதி சேவையை மட்டுமே இயக்க வேண்டிய நிலை உருவாகலாம் என SNCF எச்சரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire