விரைவில் premium திட்டத்தை அறுமுகப்படுத்தவுள்ள WhatsApp
9 பங்குனி 2026 திங்கள் 11:19 | பார்வைகள் : 2066
பிரபல மெசேஜிங் ஆப் WhatsApp, விரைவில் premium subscription திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
WhatsApp Plus என அழைக்கப்படக்கூடிய இந்த திட்டம், பயனர்களுக்கு கூடுதல் வசதிகள் மற்றும் தனிப்பயனாக்கும் (customisation) வாய்ப்புகளை வழங்கும்.
இலவசமாக பயன்படும் WhatsApp-இன் அடிப்படை வடிவம் தொடர்ந்தாலும், பிரீமியம் திட்டத்தில் சேரும் பயனர்கள் புதிய அம்சங்களை அனுபவிக்க முடியும்.
அதில் முக்கியமானது, ஆப்பின் தோற்றத்தை (appearance) மாற்றும் வசதி. புதிய ஐகான்கள், நிறங்கள், தீம்கள் ஆகியவற்றை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், தனிப்பட்ட ஸ்டிக்கர்கள், தனித்துவமான அறிவிப்பு (notification) ஒலிகள், அதிகமான எமோஜி ரியாக்ஷன்கள் போன்றவை பிரீமியம் பயனர்களுக்கே வழங்கப்படும்.
தற்போது மூன்று pin செய்யப்பட்ட உரையாடல்களை மட்டுமே WhatsApp அனுமதிக்கிறது. ஆனால் புதிய திட்டத்தில் 20 வரை உரையாடல்களை pin செய்யும் வசதி கிடைக்கும்.
இது தனிப்பட்ட மற்றும் தொழில்நுட்ப தொடர்புகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
Meta நிறுவனத்தின் மற்ற சமூக வலைத்தளங்களைப் போல விளம்பர வருவாயை WhatsApp அதிகம் சார்ந்திருக்கவில்லை. எனவே, இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் Meta-க்கு புதிய வருவாய் வழியைத் திறக்கக்கூடும்.
WhatsApp ஆரம்பத்தில் கட்டண ஆப்பாக இருந்து, பின்னர் இலவசமாக மாறியது. இப்போது மீண்டும் இந்த பிரீமியம் திட்டம் மூலம் வருவாய் ஈட்டும் முயற்சியில் உள்ளது.
இந்நிலையில், திட்டத்தின் விலை மற்றும் வெளியீட்டு திகதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், WhatsApp Plus அறிமுகமானால், அதிகம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire