யாழில் பூசாரிகளுக்கிடையே மோதல் - ஒருவர் படுகொலை
10 பங்குனி 2026 செவ்வாய் 11:04 | பார்வைகள் : 2306
யாழ்ப்பாணம், நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்ததில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் 35 வயதுடைய நிரந்தரப் பூசகருக்கும், நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமித்தம் சென்றிருந்த குருக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாகியுள்ளது.
இச்சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற குருக்கள் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக நயினா தீவு ஆலயங்களுக்குத் தொழில் நிமித்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய நயினா தீவு பூசகரை இலக்கு வைத்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire