Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை....

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை....

10 பங்குனி 2026 செவ்வாய் 13:28 | பார்வைகள் : 2117


ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்களுக்கு ஏவுகணைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், 10.03.2026 காலை மக்களுக்கு ஏவுகணைகள் தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

மக்கள் ஜன்னல், கதவுகள் அருகிலும் திறந்த வெளியிலும் நிற்கவேண்டாம் என்றும், பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் செல்லுமாறும், அரசின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறும் அமீரக மக்களுடைய மொபைல்களில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அமீரகத்தின் வான்பாதுகாப்பு அமைப்பு வழிமறித்ததாகவும், போர் விமானங்கள் ட்ரோன்களை எதிர்கொண்டதாகவும் அமீரக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சற்று முன் மக்களுக்கு ஏவுகணைகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின் நிலைமை தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.