ரஜினி கமல் பட ஷூட்டிங் எப்போ தெரியுமா?
10 பங்குனி 2026 செவ்வாய் 15:24 | பார்வைகள் : 1987
தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகளாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். 70, 80களில் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடித்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தனித்தனி பாதைகளில் பயணிக்க துவங்கினார்கள். இருவருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. சினிமாவில் இவர்களுக்கு போட்டி இருந்தாலும் நிஜ வாழ்வில் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள்..
ரஜினியும், கமலும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு பெரும்பாலான ரசிகர்களிடம் இருந்த நிலையில் தற்போது அது நடக்கவிருக்கிறது.. ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கவிருக்கிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்விருக்கிறது. மேலும் அடுத்த வருடம் ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்..
சமீபத்தில் கூட இந்த படத்தின் இந்த படம் புரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் ஹிட் அடித்தது.. ரஜினியும் கமலும் ஸ்டைலாக நடந்து வந்து ஒரு காரில் ஏறி செல்வது போல அந்த வீடியோவை உருவாக்கியிருந்தனர்.. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினி விரைவில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என தெரிகிறது..
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire