'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
10 பங்குனி 2026 செவ்வாய் 15:31 | பார்வைகள் : 2065
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா,சிவராஜ் குமார்,மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர்.
இவர்கள் அல்லாமல் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா,பாலிவுட் நடிகை வித்யா பாலன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கர்போதி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தில் ஷாருக்கான் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதில் ஷாருக்கான், ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார் என நான்கு பேரும் ஒரே காட்சியில் இடம்பெறும்படி படப்பிடிப்பு நடத்த உள்ளனர் . மேலும், இதில் ஷாருக்கான் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire