Paristamil Navigation Paristamil advert login

மார்ச் 12ல் தமிழக பொறுப்பு கவர்னராக பதவியேற்கிறார் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்!

மார்ச் 12ல் தமிழக பொறுப்பு கவர்னராக பதவியேற்கிறார் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்!

11 பங்குனி 2026 புதன் 12:08 | பார்வைகள் : 2023


தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் மார்ச் 12ல் பதவியேற்கிறார்.

தமிழகத்தின் கவர்னராக இருந்த ஆர்.என். ரவி அண்மையில் மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, மார்ச் 11ம் தேதி  ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் சென்னை வருகிறார். அன்றைய தினமே ஆர்.என். ரவி தமது பொறுப்புளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு கோல்கட்டா புறப்பட்டுச் செல்கிறார். அவரை கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் வழியனுப்பி வைக்கின்றனர்.

அதன் பின்னர், மார்ச் 12ம் தேதி முற்பகல் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2