மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – பிரதமர் Sébastien Lecornu தலைமையில் அவசர கூட்டம்!!
11 பங்குனி 2026 புதன் 07:40 | பார்வைகள் : 4069
மத்திய கிழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போர்நிலையை முன்னிட்டு, பிரதமர் Sébastien Lecornu இன்று 11ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அங்கு பணியில் இருக்கும் பிரெஞ்சு இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி Fabien Mandon உள்ளிட்ட பல உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டு நிலைமையை விளக்க உள்ளனர். ரகசிய தகவல்கள் பகிரப்படவுள்ளதால், கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்ட அறைக்குள் செல்லும் முன் தங்களது கைபேசிகளை வெளியே ஒப்படைக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்துறை அமைச்சர் Laurent Nunez, வெளிநாட்டு விவகார அமைச்சர் Jean-Noël Barrot மற்றும் பொருளாதார அமைச்சர் Roland Lescure உள்ளிட்ட பல அமைச்சர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்கின்றனர். மேலும் செனட் தலைவர் Gérard Larcher மற்றும் தேசிய சபை தலைவர் Yaël Braun-Pivet ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு போரின் தாக்கத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளதால், எரிபொருள் விலைகள் தொடர்பான பிரச்சினையும் இந்த கூட்டத்தில் பேசப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து Rassemblement national கட்சி எரிபொருள் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், La France insoumise கட்சி பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire