ஹிஸ்புல்லா தாக்குதல் ‘பெரும் தவறு’: ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடும் கண்டனம்!!
12 பங்குனி 2026 வியாழன் 07:45 | பார்வைகள் : 4181
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான அதிகரித்து வரும் மோதலைக் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.அவர் Joseph Aoun தலைமையிலான லெபனான் ஜனாதிபதியுடன் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில், லெபனானில் தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா உடனடியாக தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஹிஸ்புல்லா லெபனானை இஸ்ரேலுடன் நேரடி மோதலுக்குள் இழுத்தது ஒரு பெரிய தவறு என அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்ற நிலை மேலும் தீவிரமடையாமல் தடுக்க அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து தொடர்ந்து வான்தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பெய்ரூட் நகரின் தெற்கு பகுதி, ஹிஸ்புல்லாவின் முக்கிய ஆதிக்கப்பகுதியாக கருதப்படும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல்களின் பின்னர் அந்தப் பகுதிகளில் புகை மேகங்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், Ahmad al-Chareh தலைமையிலான சிரியா ஜனாதிபதியுடனும் கலந்துரையாடியுள்ளார். லெபனான் அரசு தனது நாட்டின் முழு நிலப்பரப்பிலும் அரசின் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளுக்கு சிரியா ஆதரவு அளிப்பதாகவும், மேலும் லெபனான் மற்றும் சிரியா நாடுகள் தங்கள் எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire