Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு எதிராக தொடர் குற்றங்கள் - மகளிர் ஆணையத்திற்கு அதிமுக புகார்

பெண்களுக்கு எதிராக தொடர் குற்றங்கள் - மகளிர் ஆணையத்திற்கு அதிமுக புகார்

13 பங்குனி 2026 வெள்ளி 10:07 | பார்வைகள் : 1766


தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சிறுமி மர்ம மரணத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேடநத்தம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் 17 வயது சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறுமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் 24 மணி நேரமாகியும் கைது செய்யப்படவில்லை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளத்தூர் - குறுக்குசாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு எட்டப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கைது செய்துவிடுவேன் என மிரட்டும் தொனியில் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் பேசியதால் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் அளித்துள்ளார்.

அதில், தூத்துக்குடி, மதுராந்தகம், கிருஷ்ணகிரியில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் முற்றிலும் பாதுகாப்பு அற்ற நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2