Paristamil Navigation Paristamil advert login

ஈராக் குர்திஸ்தான் தாக்குதல்: பிரெஞ்சு படைவீரர் உயிரிழப்பு!!

ஈராக் குர்திஸ்தான் தாக்குதல்: பிரெஞ்சு படைவீரர் உயிரிழப்பு!!

13 பங்குனி 2026 வெள்ளி 07:14 | பார்வைகள் : 4326


ஈராக் குர்திஸ்தான் பகுதியிலுள்ள எர்பில் அருகே இடம்பெற்ற தாக்குதலில் ஒரு பிரெஞ்சு படைவீரர் உயிரிழந்துள்ளதாக  ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் 7-வது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரியான அர்னோ பிரியோன்(Arnaud Frion)  என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் மேலும் பல பிரெஞ்சு படைவீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் பிப்ரவரி 28ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை இலக்காகக் கொண்டு மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து உருவான போர்நிலைக்குப் பிறகு உயிரிழந்த முதல் பிரெஞ்சு படைவீரர் இவராவார். 2015 முதல் Islamic State (டாய்ஷ்) அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு படைகளுக்கு எதிரான இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரானுக்கு ஆதரவான ஆயுதக் குழுவான Ashab al-Kahf, வளைகுடா பகுதியில் பிரெஞ்சு விமானக் கப்பலான Charles de Gaulle நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, ஈராக் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள பிரெஞ்சு நலன்களை குறிவைப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக எர்பில் அருகே இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் ஆறு பிரெஞ்சு படைவீரர்கள் காயமடைந்ததாக பிரெஞ்சு இராணுவம் தெரிவித்தது. அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணியின் கீழ், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் படைவீரர்கள் ஈராக் குர்திஸ்தான் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்