தமிழக சட்டசபை தேர்தல்! லயோலா கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்
15 பங்குனி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 1601
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் களம் காணும் நிலையில் அரசியல் களத்தில் புதிதாக குதித்துள்ள நடிகர் விஜய்யின் தவெக, சீமான் தலைமையிலான நாதக ஆகியவையும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி உள்ளன.
சட்டசனை தேர்தலில் புதிதாக களம் காணும் நடிகர் விஜய் மீது பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அவருக்கு அதிகமாக இருப்பதால் சட்டசபை தேர்தலில் தவெக அனைத்து தொகுதிகளிலுமே அதிக அளவில் வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
25 சதவீதம் வரையில் விஜய் வாக்குகளை பெறுவார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்தநிலையில், சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் (ஐபிடிஎஸ்) நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த முதல்-அமைச்சராகும் வாய்ப்பு குறித்த கருத்து கணிப்பில்
மு.க.ஸ்டாலின், விஜய் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர்.
அடுத்த முதல்-அமைச்சராக யாருக்கு வாய்ப்பு?
மு.க.ஸ்டாலின் -1
விஜய் -1
எடப்பாடி பழனிசாமி - 2
அண்ணாமலை -3
சீமான் - 4
கனிமொழி -4.
*50 தொகுதிகளில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
* 80 தொகுதிகளில் தவெக 2-ம் இட பெற வாய்ப்பு
* அதிமுக 80 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம்?
தவெக 19.20 சதவீதம்
திமுக 17.7 சதவீதம்
அதிமுக 15.32 சதவீதம்
நாதக 6 சதவீதம்.
நகர் புற மக்களின் ஆதரவு யாருக்கு?
திமுக - 24.77 சதவீதம்
தவெக - 23.46 சதவீதம்
அதிமுக - 20.55 சதவீதம்
நாதக - 6.7 சதவீதம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire