Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் நெருங்கும் முன் அரசியலில் திருப்பம் இருக்கும்; அண்ணாமலை

தேர்தல் நெருங்கும் முன் அரசியலில் திருப்பம் இருக்கும்;  அண்ணாமலை

15 பங்குனி 2026 ஞாயிறு 11:49 | பார்வைகள் : 1709


தமிழக அரசியலில், தேர்தல் நெருங்கும் முன் ஒரு திருப்பம் இருக்கும்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை காளப்பட்டியில் உள்ள வீட்டில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:

விளாத்திகுளத்தில் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. முதல்வர் வெட்கி தலைகுனிய வேண்டும். இந்தியாவில் எங்காவது பெட்ரோல் டீசல், தட்டுப்பாடு உண்டா? தமிழகத்தில் மட்டும் தான் கேன் எடுத்துச் சென்று பெட்ரோல் பிடிக்க துாண்டி வருகின்றனர். வதந்திபரப்பி, மக்களிடம் பீதியை கிளப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் டி.ஜி.பி.,,உள்துறை செயலர், தவறான தகவல்களை அளித்து மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். விஜய் பற்றி என்னுடைய கருத்தில் மாற்றம் இல்லை. தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படலாம். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி கிளம்பி விட்டது. ஆறு தொகுதியில் போட்டியிட்டிருந்த ம.தி.மு.க.,விற்கு நான்கு சீட் தான் கொடுத்துள்ளனர். திருமா, ஆறு, ஏழு சீட்டுகளை ஏற்றுக் கொள்வாரா என தெரியாது.

தமிழக அரசியலில், தேர்தல் நெருங்கும் முன் ஒரு திருப்பம் இருக்கும்; இந்த முறை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கருர் பிரச்னையில் சி.பி.ஐ., விசாரணை கேட்டதே த.வெ.க.,தான். ஜனநாயகன் படத்துக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜியை சி.பி.ஐ., விசாரிப்பதில் தவறு இல்லை. தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., வலுவாக உள்ளது.

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் நிற்கிறார். தி.மு.க.,வின் தலைவர்கள், இப்போதே ஜெயித்து விட்டதாக காட்டிக் கொள்கின்றனர். இது தான் அவர்களின் அழிவுக்கு அஸ்திவாரம்.இதுவரை நான் போட்டியிட சீட் கேட்கவில்லை. கட்சி சொல்வதை செய்வேன். பிரசாரம் செய்வது எனது கடமை. தே.ஜ.,வெற்றி வாய்ப்புக்கு உழைப்பேன்.

ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன்; அவரும் பதில் அளித்திருந்தார். அந்த பதவிக்கு உரிய மரியாதை. தேர்தலுக்கு பின் சந்திக்க நேர்ந்தாலும் அதே அன்போடு பேசுவேன்.தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசுடன் மோதல் போக்கு உள்ள ஒரு கட்சி வேண்டாம். அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற நிலையையும், சட்டம் ஒழுங்கையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதை தே.ஜ., கூட்டணியால் மட்டுமே தர முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2