Paristamil Navigation Paristamil advert login

கடைக்குமுன் குத்திக்கொலை செய்யப்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர் :குடும்ப உறுப்பினர் கைது!!!

கடைக்குமுன் குத்திக்கொலை செய்யப்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர் :குடும்ப உறுப்பினர் கைது!!!

15 பங்குனி 2026 ஞாயிறு 08:10 | பார்வைகள் : 5481


பரிஸ் நகரின் 12வது வட்டாரத்தில் உள்ள Taine வீதியில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பரிதாபகரமான சம்பவத்தில், ஒரு இறைச்சிக்கடை உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிற்பகல் சுமார் 4.20 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர் கடைக்குமுன் தரையில் விழுந்து கிடந்ததையும், அவரது முதுகில் கத்தி பதிந்திருந்ததையும் மீட்பு குழுவினர் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை தகவலின்படி, கடையில் தந்தையுடன் பணியாற்றி வந்த அவரது மகன் தாக்குதல் நடத்திய நபரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். ஆரம்ப விசாரணைகளின் படி, தாக்குதல் நடத்தியவர் குடும்பத்தைச் சேர்ந்த நபர் எனவும், நீண்ட காலமாக இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே காவல்துறை சந்தேகநபரை கைது செய்து, திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டில் காவலில் வைத்துள்ளது.

மீட்பு படையினர் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக உயிர் காப்பாற்ற முயன்றபோதும், மாலை 5.20 மணியளவில் இறைச்சிக்கடை உரிமையாளர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்தனர். சுமார் 12 ஆண்டுகளாக அப்பகுதியில் இந்த இறைச்சிக்கடையை நடத்தி வந்தவர் மிகவும் நட்பானவர் மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என அப்பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்