நாட்டை அவமதிக்கிறார் ராகுல்; அமித் ஷா கடும் தாக்கு
16 பங்குனி 2026 திங்கள் 07:06 | பார்வைகள் : 1531
நாட்டையும், ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் எம்பி ராகுல் அவமதித்து விட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சில நேரங்களில் பார்லி வாசலில் அமர்ந்து டீ மற்றும் பக்கோடா சாப்பிடுகிறார். காலை உணவு சாப்பிடும் இடமா அது? பார்லி நமது ஜனநாயகத்தின் மிக உயரிய அமைப்பு. அங்கே அமர்ந்து போராட்டம் நடத்துவதே ஜனநாயக விரோதம். அப்படியிருக்கையில் அங்கு அமர்ந்து டீ, பக்கோடா சாப்பிடுகிறீர்கள். இது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும். இந்திய ஜனநாயகத்தின் உயரிய அமைப்பான பார்லியின் கண்ணியத்தைக் குறைத்துள்ளது.
பிரதமர் மோடியையும், பாஜவையும் எதிர்க்கிறேன் என்ற பெயரில், ராகுல் இப்போது இந்தியாவையே எதிர்க்கத் தொடங்கிவிட்டார். எங்கள் அரசை எதிர்த்து எவ்வளவு போராட்டம் வேண்டுமானாலும் நடத்துங்கள், ஆனால் பார்லியில் நீங்கள் பேசாமல் அங்கிருந்து ஓடுகிறீர்கள்.
டில்லியில் நடந்த ஏஐ மாநாட்டின் போது அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி, நாட்டை அவமதித்தவர்களை ராகுல் ஆதரித்துள்ளார். நாட்டு மக்கள் இத்தகைய செயல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாமில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், மக்களின் ஆரோக்கியத்தை விட தனது குடும்பங்களின் நிதி நிலையை உயர்த்துவதிலேயே அதிக கவனம் செலுத்தினர், இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire