அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா?, வராதா?
16 பங்குனி 2026 திங்கள் 14:44 | பார்வைகள் : 1313
தமிழ்நாட்டில் 17-வது சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 வார காலமே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இன்னும் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன. இந்தக் கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வருமா?, வராதா? என்ற கேள்வி நாட்கணக்கில் நீடித்து கொண்டே இருக்கிறது.
கூட்டணிக்கு யாரும் வரவில்லை ஆரம்பத்தில், த.வெ.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய். கூட்டணிக்கு யாரும் வரலாம். அவ்வாறு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்குதரப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில், த.வெ.க. கூட்டணிக்கு யாரும் வரவில்லை. இதனால், அடுத்து என்ன செய்வது? என்று நடிகர் விஜய் யோசித்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ.க. தரப்பு அவருடன் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு நெருங்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வருமா? எடப்பாடி பழனிசாமி பதில்.எடப்பாடி பழனிசாமி மறுப்புஅ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க. இணைந்தால், 60 தொகுதிகள், துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், த.வெ.க. தரப்பில், கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் 2½ ஆண்டுகள் விஜய் முதல்-அமைச்சராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பா.ஜ.க. ஒரு வகையில் ஏற்றாலும், அ.தி.மு.க. முற்றிலும் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. துணை முதல்-அமைச்சர் பதவி வேண்டுமானால் கொடுக்கலாம், ஆனால் முதல்-அமைச்சர் பதவி எல்லாம் கொடுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
சி.பி.ஐ. விசாரணை முடிந்து சென்னை வந்தடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய் .நிர்வாகிகளிடம் கருத்து கேட்புஇந்த நேரத்தில்தான், த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நடத்தினார். அப்போது, தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா?, தனித்து போட்டியிடலாமா? என்று நிர்வாகிகளிடம் அவர் கருத்து கேட்டுள்ளார். அப்போது, பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி என்றால், உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும் என்று ஆனந்த் கூறியுள்ளார். அதற்கும் நிர்வாகிகள், கட்சியின் வளர்ச்சியே இப்போது முக்கியம் என்று சொல்லியுள்ளனர்.
பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை - தவெக தலைவர் விஜய்.டெல்லியில் பேச்சு வார்த்தைஇந்த நிலையில்தான், சி.பி.ஐ. விசாரணைக்காக நேற்று முன்தினம் த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி சென்றார். அவருடன் நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி ஆகியோர் சென்றனர். அன்று இரவு ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி ஆகியோரை டெல்லி கோல்ப் கிளப் அருகே பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தனியாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது, த.வெ.க. தனித்து போட்டியிட்டால் தி.மு.க. எளிதில் வென்றுவிடும். தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று த.வெ.க. நினைத்தால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுங்கள் என்று கூறினார்களாம்.
பா.ஜ.க. கடைசி முயற்சி வெற்றி பெறுமா?இதுகுறித்து, ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் விஜய்யிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், விஜய் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, அமைதி காத்து வருகிறார். இதனால், த.வெ.க. நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், பா.ஜ.க.வின் கடைசி முயற்சியும் வெற்றி பெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire