ஆதவ் அர்ஜூனா பேச்சு உண்மைக்கு மாறானது; ரஜினி கண்டனம்
17 பங்குனி 2026 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 1725
என்னைப்பற்றி தவெக கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து. காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும், என்று நடிகர் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக மிரட்டியதால்
சென்னையில் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, திமுக மிரட்டியதால் தான் அரசியலுக்கு வரும் முடிவை ரஜினி கை விட்டார் என கூறியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர், ரஜினி ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறு கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி,
திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.
இவ்வாறு ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire