ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!
17 பங்குனி 2026 செவ்வாய் 16:23 | பார்வைகள் : 1772
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி டாங்கர் கப்பல் நந்தா தேவி குஜராத்தின் வதினார் துறைமுகத்தை வந்தடைந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அந்த வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்தினார்.
இந்தியாவின் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற எல்பிஜி டேங்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர். அவற்றில் ஷிவாலிக் எல்பிஜி டேங்கர், குஜராத்தின் முந்தரா துறைமுகத்திற்கு மார்ச் 16ம் தேதி வந்தது. தற்போது மற்றொரு இந்திய கப்பல் நந்தா தேவி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வதினார் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியாவிற்கு உதவும்!
இது குறித்து நந்தா தேவி கப்பலின் தலைமை அதிகாரிகள் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்குத் தேவையான உதவிகளை இந்திய மற்றும் ஈரான் கடற்படைகள் வழங்கிய நிலையில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகமும், இந்திய கப்பல் கழகமும் இந்த முயற்சியை மேற்கொண்டது. மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டுள்ள இக்காலத்தில், 47,000 மெட்ரிக் டன் எல்பிஜி இந்தியாவிற்கு உதவும்.
ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். தற்போது நந்தா தேவி கப்பல் குஜராத்தின் காண்ட்லாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்கு அது 46,000 மெட்ரிக் டன் அளவிலான எல்பிஜியை விநியோகிக்க உள்ளது. இது உலகளாவிய எல்பிஜி நெருக்கடிக்கு உதவும். எதிர்காலத்திலும் நாங்கள் தொடர்ந்து எல்பிஜியை விநியோகிப்போம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire