ஜனநாயகத்தை பாதுகாத்த வாக்காளர்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
24 சித்திரை 2026 வெள்ளி 09:35 | பார்வைகள் : 1616
சாதனை அளவில் ஓட்டளித்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடமையை, தமிழக வாக்காளர்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது சமூக வலைத்தளப் பதிவு:
ஜனநாயக திருவிழாவின் சாதனை ஓட்டுப்பதிவு, பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு. எப்போதும் போல பெரியஅசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது, தமிழக தேர்தல்.
சாதனை அளவில் ஓட்டளித்து, ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடமையை, தமிழக வாக்காளர்கள் சரிவர ஆற்றியுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட துாரம் பயணித்து வந்து ஓட்டளித்து விட்டு, இரவே மீண்டும் கிளம்பி அவரவர் பணியாற்றும் ஊர்களுக்கு செல்கின்றனர்.
ஒரு ஓட்டு தானே என எண்ணாமல், ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது என்ற நினைப்பே இந்த உந்துதலுக்கு காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். தமிழகம் ஓட்டளித்து விட்டது. மே 4ம் தேதி வெல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire