Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் இரண்டு மாதங்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்

 ஈரானில்  இரண்டு மாதங்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்

25 சித்திரை 2026 சனி 16:45 | பார்வைகள் : 2065


ஈரான் மீது இஸ்ரேல் போர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் ஈரானின் சர்வதேச விமான சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது

ஈரான் இரண்டு மாதங்களுக்கு பிறகு தலைநகர் தெஹ்ரானில் இமாம் கோமேனி சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலால் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

25.04.2026 (சனிக்கிழமை) முதல் விமானங்கள் இஸ்தான்புல் (துருக்கி), மஸ்கட் (ஓமன்), மதீனா (சவுதி அரேபியா) ஆகிய இடங்களுக்கு புறப்பட்டன.

சமீபத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்ட இடைக்கால சமாதான ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் தனது வான்வழியை பகுதியளவில் திறந்திருந்தது.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானில் நடத்திய இரு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முண்ணேற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கம், அமெரிக்க தூதர்கள் அங்கு வரவிருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது, ஈரான் மக்களுக்கும் வணிகத்துறைக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

போர் காரணமாக பாதிக்கப்பட்ட சர்வதேச வர்த்தகம் மற்றும் பயணங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்