பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம்ஆத்மி அரசு?
26 சித்திரை 2026 ஞாயிறு 08:28 | பார்வைகள் : 1843
பாஜவில் இணைந்த அதிருப்தி எம்பி ராகவ் சத்தாவின் கட்டுப்பாட்டில் பஞ்சாப்பின்63 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எந்நேரமும் அங்கு ஆம்ஆத்மி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாடுகளின் மீது ஏற்பட்ட விரக்தியால், அக்கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா உள்பட ராஜ்ய சபா எம்பிக்கள் 7 பேர் ஆம்ஆத்மியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் உள்ளிட்டோர் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல், ராஜ்ய சபாவில் 10ஆக இருந்த ஆம்ஆத்மி எம்எல்ஏக்களின் பலம் 3ஆக குறைந்துள்ளது. ராகவ் சத்தா பஞ்சாப்பில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவர் தற்போது பாஜவில் இணைந்ததால், பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி அரசு ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப்பில் 92 எம்எல்ஏக்களுடன் ஆம்ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. அவர்களில் 63 பேர் ராகவ் சத்தாவின் ஆதரவாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவினால் அங்கு ஆம்ஆத்மி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்நேரம் வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்ற சூழல் இருப்பதாக ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றன.
இதனிடையே, ராகவ் சதா கட்சி தாவல் குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன்,'சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமும் பயன்படுத்தப்பட்ட அதே வாஷிங் மெஷின் பஞ்சாபில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜவில் இணையும் துரோகிகளான 7 எம்பிக்களும் பஞ்சாப்பை பிரதிபலிக்கமாட்டார்கள்,' என்று காட்டமாக கூறியிருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire