முடக்கப்படும் சிறைச்சாலைகள் காரணம் என்ன?
26 சித்திரை 2026 ஞாயிறு 16:19 | பார்வைகள் : 1910
பிரான்சின் சிறைச்சாலைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் அதிக நெரிசல் குறித்து எச்சரிக்க, UFAP‑UNSa Justice என்ற தொழிற்சங்கம் ஏப்ரல் 27 திங்கட்கிழமை முதல், அனைத்து சிறைச்சாலை அமைப்புகளையும் முடக்க அழைப்பு விடுத்துள்ளது.
«ஏப்ரல் 27 முதல் அனைத்து சிறைச்சாலை அமைப்புகளையும் முடக்க வேண்டும்» என ஏப்ரல் 20, 2026 அன்று வெளியிட்ட அறிக்கையில், UFAP‑UNSa Justice தெரிவித்துள்ளது.
SPIP மற்றும் பிற சிறைச்சாலை அமைப்புகளில், பொது கூட்டங்களை நடத்தி, ஒற்றுமையான போராட்டத்தை அமைக்க அழைப்பு விடுத்துள்ளது.
சிறை மறு ஒருங்கிணைப்பு மற்றும் நன்னடத்தை சேவைகளான SPIP (services pénitentiaires d'insertion et de probation) இல் 1,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன
பணியாளர்கள் மீது
→ அதிக பொறுப்புகள்,
→ குறைந்த மனிதவளம்,
→ அதிக பணிச்சுமை
இதனால் பணியாளர்கள் சோர்வு மற்றும் மனஅழுத்தத்தில் உள்ளனர். UFAP‑UNSa Justice அனைத்து பணியாளர்களையும் ஒன்றிணைந்து கோருமாறு அழைக்கிறது :
காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பும் திட்டம்,
அனைத்து நிலைகளுக்கும் நியாயமான பணியிட மாற்ற வாய்ப்புகள்,
சிறைச்சாலைகளில் அதிக நெரிசலைக் குறைக்கும் அவசர நடவடிக்கைகள்,என்ற நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ளன.
சிறைச்சாலை அமைப்பு தற்போது வெடி நிலைக்கு வந்துள்ளதாக, சங்கங்களும் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
மார்ச் 1 நிலவரப்படி :
→ சிறைச்சாலைகளின் மொத்த நிரம்பல் விகிதம் : 137.5%
→ கைதிகள் : 87,126 (புதிய சாதனை)
நீதித்துறை அமைச்சகம், 3,000 புதிய சிறைச்சாலை இடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதில் பாதி 2027க்குள் திறக்கப்படும் எனத் தெரிவித்தது. ஆனால் 2018ல் அறிவிக்கப்பட்ட 15,000 புதிய இடங்களில் , மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இதுவரை முடிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire