நான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சில நேரங்களில் மிகுந்த சோகத்தில் இருக்கிறேன் - பிரிஜித் மக்ரோன்!
26 சித்திரை 2026 ஞாயிறு 17:23 | பார்வைகள் : 2954
எமானுவல் மக்ரோனின் மனைவி பிரிஜித் மக்ரோன் (Brigitte Macron) கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் வாழ்ந்த அனுபவங்களைப் பற்றி ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் மனம் திறந்து பேசியுள்ளார். முன்னாள் பிரெஞ்சு மொழிப் பேராசிரியரான ஆன அவர், இணையவழி கொடுமைக்கும் (cyberharcèlement) இற்கும் உள்ளாகியிருந்தார்.
பிரிஜித் மக்ரோன் "எலிசேக்கு வந்ததற்கு முன் இவ்வளவு துயரத்தை நான் உணர்ந்ததே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
"முன்பு, எனக்கு ஒரு சாதாரண வாழ்க்கை இருந்தது. குழந்தைகள், ஒரு வேலை, மற்றவர்களைப் போலவே ஏற்ற தாழ்வுகள். இங்கே, இந்தப் பத்து வருடங்கள் மிக வேகமாக கடந்துவிட்டன... அவை மிகவும் தீவிரமானவையாக இருந்தன. நான் உலகின் இருளையும், முட்டாள்தனத்தையும், தீமையையும் கண்டிருக்கிறேன். நான் இதற்கு முன் இருந்ததை விட சில நேரங்களில் அதிக சோகமாக இருக்கிறேன்"
2027‑இல் இரண்டாவது ஜனாதிபதிக்காலம்முடிவடையும் போது, அவர் எலிசேயை விட்டு வெளியேற வேண்டியுள்ளது.
Élysée‑யில் நடந்த இந்த செவ்வியில் , அவர் மேலும்,
"சில சமயங்களில் நீல வானத்தைப் பார்ப்பது எனக்குக் கடினமாக இருக்கிறது... முன்பு இல்லாத அளவுக்கு அவநம்பிக்கையான தருணங்கள் எனக்கு ஏற்படுகின்றன"
பிரிஜித் மக்ரோன் இணையத்தில் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். தனது எண்ணங்களை எழுதுவது தான்தனக்கு மிகவும் உதவியாக இருந்தது என அவர் கூறுகிறார்.
2024 ஜனவரியில், அவரை குறிவைத்து அவமானங்கள், வதந்திகள், குறிப்பாக அவரது பாலினம் மற்றும் வயது வித்தியாசம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய பல இணைய வல்லினவாளர்கள், ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை உட்பட பல தண்டனைகளைப் பெற்றனர்.
Eஎமானுவல் மக்ரோன்(48 வயது) மற்றும் பிரிஜித் மக்ரோன் (73 வயது) ஆகியோரின் உறவைச் சுற்றி பல பொய்த் தகவல்கள் பரவியுள்ளன. இதை எதிர்த்து, அவர்கள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire