11000 MAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை தயாரித்துவரும் Honor
26 சித்திரை 2026 ஞாயிறு 19:13 | பார்வைகள் : 2276
ஸ்மார்ட்போன் உலகில் புதிய அதிரடி முயற்சியை Honor நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, Honor நிறுவனம் மிகப்பெரிய 11,000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போன் மொடலை உருவாக்கி வருகிறது.
இந்த தகவலை பிரபல டிப்ஸ்டர் Digital Chat Station வெளியிட்டுள்ளார். அவர் கூறியதன்படி, இந்த பேட்டரியின் ரேட்டட் திறன் 10,690mAh ஆகும். வழக்கமான திறன் 11,000mAh வரை இருக்கும்.
பொதுவாக சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இது மிகப்பெரிய பேட்டரியாக இருக்கும். Honor நிறுவனம் இதற்கு முன்பே Power 2 மாடலை 10,080mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது.
அதில் 80W வேகமான சார்ஜிங் வசதி மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டது. அந்த மாடல் 14.2 மணி நேரம் கேமிங் மற்றும் 17.3 மணி நேரம் நெவிகேஷன் செய்யும் திறன் கொண்டது.
புதிய Honor மொடல் Power Series-இல் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், நீண்ட நேரம் பேட்டரி ஆயுள் கொண்ட போனை தேடும் பயனர்களுக்கு Honor நிறுவனம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.
இந்த முயற்சி, ஸ்மார்ட்போன் சந்தையில் Honor நிறுவனத்தின் போட்டித் திறனை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire