தனுசின் கர சாதிக்குமா?
27 சித்திரை 2026 திங்கள் 14:30 | பார்வைகள் : 1864
தமிழ் சினிமாவில் படங்கள் ஓடுவதே சாதனை ஆகிவிட்ட காலத்தில், 100 கோடி வசூல் என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. சமீபத்தில் வந்த தாய் கிழவி படம் 100 கோடியை அள்ளவில்லை. அதேபோல் யூத் படமும் 100 கோடியை எட்டவில்லை. தாய்கிழவி 75 கோடியிலும் , யூத் படம் 82 கோடியிலும் ஓட்டத்தை நிறுத்திவிட்டது. அதற்குமுன்பு வந்த வித் லவ் படமும் 100 கோடியை நெருங்கவில்லை. பிரதீப்ரங்கநாதன் நடித்த எல்ஐகே படத்துக்கும் அதே நிலை.
இந்த சூழ்நிலையில் கோடை விடுமுறைக்கு தனுஷ் நடித்த கர வருகிறது. ஏப்ரல் 30ம் தேதி இந்த படத்துக்கு எந்த படமும் மோதவில்லை. மே 14ல்தான் கருப்பு, நுாறுசாமி படங்கள் வர உள்ளன. இந்த படத்தை இயக்கியவர் ‛போர் தொழில்' விக்னேஷ் ராஜா. படத்தின் டிரைலருக்கும் ஓரளவு வரவேற்பு பெற்றுள்ளது.
கர படமும் சிங்கிளாக வருவதால் தியேட்டர் புக்கிங் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த படம் 100 கோடியை அள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை விஜயின் ஜனநாயகன் மே மாதம் வந்தால் கர படத்தின் வசூல் பாதிக்க வாய்ப்புள்ளது. தனுஷ் இதற்கு முன்பு நடித்ததில் ‛ராயன், குபேரா, வாத்தி, திருச்சிற்றம்பலம், தேரே இஷ்க் மெய்ன்' உள்ளிட்ட படங்கள் 100கோடி வசூலை ஈட்டின.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire