கமல்ஹாசன் படத்தில் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்
27 சித்திரை 2026 திங்கள் 15:21 | பார்வைகள் : 2212
தமிழ் சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். 5 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். அப்படி பார்த்தால் சினிமாவில் 60 வருடங்களுக்கு மேல் நடித்த அனுபவம் கொண்டவர் இவர். நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் கமல்ஹாசன்.தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்தவர், இவருக்கென்று ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதேநேரம் அதன்பின் வெளிவந்த தக் லைப் திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, தக் லைப் திரைப்படத்திற்கு பின் கமல் இப்போது வரை எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.
அதேநேரம் கமலின் 237வது படத்தை தமிழ் சினிமாவில் பல படங்களுக்கும் சண்டை காட்சிகளை அமைத்து வரும் அன்பு - அறிவு சகோதரர்கள் இணைந்து இயக்கவிருக்கிறார்கள். இந்நிலையில்தான் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடிக்க போவதாகவும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்கவுள்ளதாக தற்போது செய்த் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire