பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்; அமித் ஷா உறுதி
28 சித்திரை 2026 செவ்வாய் 07:42 | பார்வைகள் : 1884
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் ஒருவர் பல திருமணங்களை செய்து கொள்ளலாம் என்று இருக்க முடியாது என்பதே நோக்கம்,' என்று மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 29ம் தேதி நடைபெற இருக்கும் 2வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பெஹாலா தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ நடத்தினார். அப்போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அவர் பேசியதாவது; மேற்கு வங்கத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்தப்படும் போது, எத்தனை உயிர்கள் பறிபோய் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். பாஜவின் பிரசாரக் கூட்டத்தில் பொதுமக்களை காணவே முடியாது என்று முதல்வர் மத்மதா பானர்ஜி கூறுகிறார். வெளியே வந்து பாருங்கள், மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்று புரியும். வரும் சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சியமைக்கும்.
அச்சம் எங்கே இருக்கிறது? நாம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் ஒருவர் பல திருமணங்களை செய்து கொள்ளலாம் என்று இருக்க முடியாது என்பதே நமது நோக்கம் , இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire